2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடகொரியாவின் ஆயுதக் கட்டமைப்பு சோதனை

Editorial   / 2017 மே 28 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய விமான எதிர்ப்பு ஆயுதக் கட்டமைப்பொன்றின் பரிசோதனை, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் தலைமையில் இடம்பெற்றது என, வடகொரிய அரச ஊடகம், இன்று தெரிவித்தது.  கடந்த சில வாரங்களாக, ஏவுகணைச் சோதனைகளை நடத்திவந்த நிலையிலேயே, இந்தச் சோதனை, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை, எப்போது அல்லது என்ன நேரத்தில் இடம்பெற்றது, எவ்வகையான ஆயுதக் கட்டமைப்புக்கான சோதனை இடம்பெற்றது போன்ற விடயங்களை, அவ்வூடகம் வெளிப்படுத்தவில்லை. மாறாக, தேசிய பாதுகாப்பு விஞ்ஞான அக்கடமியால் இது ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரிவித்தது.
இந்தச் சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து, பாரியளவில் இதை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விநியோகிக்குமாறு, நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன் உத்தரவிட்டார் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இந்தக் கட்டமைப்பு மூலமாக, வெளிநாட்டைச் சேர்ந்த “எதிரிகள்”, ஆகாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த முடியுமென, அரச ஊடகம் தெரிவித்தது.
கடந்த வாரத்தில், மத்தியதூர ஏவுகணையொன்றைச் சோதித்ததாக, வடகொரியா அறிவித்திருந்தது. இது, அண்மைக்காலத்தில் அந்நாடு அடைந்த முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது.
ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் அணுசக்தித் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்கு, வடகொரியாவுக்கு, ஐக்கிய நாடுகளால் விதிக்கப்பட்ட தடையையும் மீறி மேற்கொள்ளப்படும் இவ்வாறான சோதனைகள், அந்நாடு மீது, அதிகமான தடைகள் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .