2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வடகொரியாவுக்கு பலூன்களில் துண்டுப் பிரசுரங்கள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து, வடகொரியாவுக்கெதிரான செய்திகளைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை, வடகொரியாவுக்குள் இன்று செலுத்தினர். வாயு நிரப்பப்பட்ட பலூன்களின் உதவியோடு, இந்தத் துண்டுப் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தென்கொரியாவில் காணப்படும் பழைமைவாதச் செயற்பாட்டாளர்கள், வடகொரியாவிலிருந்து தப்பிவந்தோர் எனப் பலரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை, இரண்டாவது நாளாகத் தொடர்ந்திருந்தது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, 50,000 துண்டுப் பிரசுரங்களை வடகொரியாவுக்குள் அனுப்பியிருந்த இவர்கள், இன்று திங்கட்கிழமை, 100,000 துண்டுப் பிரசுரங்களை அனுப்பியிருந்தார்கள்.

அந்தத் துண்டுப் பிரசுரங்களில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கு எதிரான வாசங்கள் காணப்பட்டிருந்தன. 'அணுசக்திப் பைத்தியம் கிம் ஜொங்-உன்னின் தலையில் நெருப்பால் இரக்கமற்றுத் தாக்கு", 'கிம் ஜொங்-உன்னின் தலை எமக்கு வேண்டும்" போன்ற வாசங்கள், அவர்களது துண்டுப் பிரசுரங்களில் உள்ளடங்கியிருந்தன.

இரு நாடுகளுக்குமிடையில், பதற்றமான நிலைமையே தொடர்ந்தும் நிலவுகின்ற நிலையில், பலூன்களில் துண்டுப் பிரசுரங்களை அனுப்பிய இந்நடவடிக்கை, மேலும் முரண்பாட்டை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .