2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வயோமிங், வொஷிங்டன் டி.சி-இல் ட்ரம்ப் படுதோல்வி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான முதன்மைத் தேர்தல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், குடியரசுக் கட்சிக்காக வயோமிங், வொஷிங்டன் டி.சி ஆகிய இரு இடங்களிலும் இடம்பெற்ற தேர்தலில், அக்கட்சியின் முன்னிலை வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், படுதோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சிக்காக வடக்கு மரியானா தீவுகளில் இடம்பெற்ற தேர்தலில், ஹிலாரி கிளின்டன் வெற்றிபெற்றார்.

அமெரிக்கத் தலைநகரான வொஷிங்டனில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான அலை வீசியது. இதில், 37.3 சதவீத வாக்குகளைப் பெற்ற மார்க்கோ றூபியோ, 10 பிரதிநிதிகளுடன் வெற்றிபெற்றார். 35.5 சதவீத வாக்குகளைப் பெற்ற ஜோன் கேசிச், 9 பிரதிநிதிகளைப் பெற்றார். டொனால்ட் ட்ரம்ப்புக்கு 13.8 சதவீத வாக்குகளும் டெட் குரூஸூக்கு 12.4 சதவீத வாக்குகளுமே கிடைத்தன.

வயோமிங்கில் இடம்பெற்ற தேர்தலில், 66.3 சதவீத வாக்குகளைப் பெற்ற டெட் குரூஸ், 9 பிரதிநிதிகளுடன் வெற்றிபெற, 19.5 சதவீத வாக்குகளுடன் ஒரு பிரதிநிதியை வென்ற மார்க்கோ றூபியோ, 2ஆவது இடத்தைப் பெற்றார். 7.2 சதவீத வாக்குகளைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், ஒரு பிரதிநிதியை வென்ற போதிலும், மூன்றாவது இடத்தையே பெற்றார்.

வட மரியானா தீவுகளில், 54 சதவீத வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டன், 4 பிரதிநிதிகளைப் பெற்றார். பேணி சான்டர்ஸூக்கு 2 பிரதிநிதிகளின் ஆதரவே கிடைத்தது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை, சிக்காக்கோவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், பேர்ணி சான்டர்ஸின் ஆதரவாளர் குழுவொன்று புகுந்து, இனவாதத்துக்கெதிரான கோஷங்களை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, அக்குழுவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்குமிடையில் வன்முறை ஏற்பட்டதோடு, பின்னர், அந்தக் கூட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .