2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'வெளியாட்களின் கையாள்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனக் கடலின் உரிமை தொடர்பாக நெதர்லாந்திலுள்ள தீர்ப்பாயத்துக்கான நிரந்தர நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நிராகரித்துள்ள சீனா, அந்தத் தீர்ப்பானது முரண்பாட்டை அதிகப்படுத்தும் எனவும், நேரடியான மோதலை ஏற்படுத்தக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள சீனாவின் தூதுவர் குய் தியான்காய், இந்த எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை, ஆசியா மீதான அமெரிக்காவின் அணமைக்கால கரிசனையின் விளைவாக ஏற்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், இந்த வழக்கானது, இந்தத் தீர்ப்பாய நடவடிக்கைகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துமெனவும் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை விமர்சித்த சீனாவின் அரச பத்திரிகைகள், "பிலிப்பைன்ஸ் சமர்ப்பித்த பொய்த் தொகுதிகளை நம்பி, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தன.

இந்த நீதிமன்றத்தை வெளியாட்களின் கையாள் என வர்ணித்த ஆளுங்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகை, இது, மனித வரலாற்றின் கேலிக்குரிய ஒன்றாக ஞாபகம் வைத்திருக்கப்படும் எனத் தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X