2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்பெயின் பிராந்தியத் தேர்தல்களில் கட்டலோனியா பிரிவினைவாதிகள் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய பிராந்தியமான கட்டலோனியாவின் சுதந்திரத்துக்கு உறுதியளித்துள்ள பிரிவினைவாதக் கூட்டணியினர், பிராந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற தேர்தலில் 99 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 135 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் “ஆம் க்கா ஒன்றிணைவோம்” குழு 62 ஆசனங்களை பெற்றுள்ளது.

இவர்கள், 10 ஆசனங்களை வென்றுள்ள சுதந்திரத்துக்கு ஆதரவான இடதுசாரிக் கட்சியான பொப்பியுலர் யுனிட்டி கன்டிடசி கட்சியுடன் சேருமிடத்து, 2017ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து கட்டாலோனியா சுதந்திரமடையும் திட்டத்தை முன்னெடுப்பதுக்கு 68 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் பிரிவினைவாதக் கட்சிகள் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுமிடத்தே, சுதந்திரத்துக்கான கோரிக்கையில் தாம் அவர்களுடன் இணைவோம் என பொப்பியுலர் யுனிட்டி கன்டிடசி கட்சி தெரிவித்திருந்த நிலையில், பிரிவினைவாதக் கட்சிகள் 48 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளன.

ஸ்பெயினினுடைய பொருளாதாரத்தில் ஐந்திலொரு பங்கை கொண்டிருக்கும் கட்டலோனியா பிரதேசத்தவர்கள், தாங்கள் அதிகமான வரிகளை எதிர்கொள்வதாகவும், எனினும் அரசாங்கத்தின் முதலீட்டில் குறைந்த பகுதியையே தாங்கள் பெறுவதாக, ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் முதல் தெரிவிக்கும் அவர்கள் பிரிந்து செல்ல விரும்புகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .