2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹோட்டல் தாக்குதலையடுத்து மாலியில் அவசர கால நிலை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலித் தலைநகர் பமகோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை துப்பாக்கிதாரிகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து 21 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று அங்கு அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தாவுடன் தொடர்புகளைக் கொண்ட அல்ஜீரியாவைத் தளமாகக் கொண்ட ஆயுதக்குழுவான அல்-மௌராபிட்டன் குழு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளதோடு, இம்ராட் அல்-சஹ்ரா குழு, அல்கொய்தா, இஸ்லாமிக் மக்ரெப் ஆகிவற்றின் ஒருங்கிணைப்பில் தாக்குதலை நடாத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, மூன்று நாட்கள் துக்க தினத்தை அறிவித்த மாலியின் ஜனாதிபதி இப்ராகிம் பூபகார் கெய்ட்டா, இரண்டு தாக்குதலாளிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, மூன்று தாக்குதலாளிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டதாக மாலி அரச தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.

ஹோட்டலினுள் நுழைந்த ஆயுததாரிகள், குறைந்தது 170 பேரைப் பணயக்கைதிகளாக வைத்திருந்த முற்றுகையின் மீட்பு நடவடிக்கைகையை அமெரிக்க, பிரான்ஸ், மாலி சிறப்பு படைகள் முடிவுக்கு கொண்டுவந்திருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .