2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹீட் நகரை நோக்கி ஈராக் சிறப்புப் படைகள் முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களின் ஆதரவோடும் இராணுவத் துருப்புக்களின் ஆதரவோடும் ஈராக்கிய சிறப்புப் படைகள், ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில், மாதக்கணக்காக ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் கட்டுப்பாட்டிலுள்ள ஹீட் நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹீட் நகரத்தை நோக்கி முன்னேறி வரும் இராணுவ வாகனத் தொடரணிக்கு அருகில், ஐ.எஸ்.ஐ.எஸ் கார்த் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நேற்று தன்னை வெடிக்க வைத்ததில் ஈராக்கிய படைவீரர்கள் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கியத் துருப்புக்களுக்கு சில நூற்றுக்கணக்கான ஐக்கிய அமெரிக்கத் துருப்புக்கள் பயிற்சியளித்துக் கொண்டிருக்கும் ஐன் அல்-அசாட் வான் தளத்துக்கு அருகில் இருக்கும் மேற்படி ஹீட் நகரத்தைக் கைப்பற்றுவதன் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆனது மேலும் மேற்கு சிரிய எல்லையை நோக்கித் தள்ளப்படுவதுடன் வடக்கு நகரான சமாராவின் தொடர்பையும் இழக்கும். இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பக்தாத்துக்கு அருகில், பலூஜா மாத்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பலமான தளமாக அமையும்.

ஹீட் நகரின் தெற்கு, மேற்குப் பகுதிகளை ஈராக்கியப் படைகள் நேற்றுக் கைப்பற்றியிருந்தன. ஹீட் நகர மையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தமது துருப்புக்கள் நிலை கொண்டுள்ளதாக, மூன்று மாதங்களுக்கு முன்னர், அருகிலுள்ள முக்கிய நகரான றமாடியை மூன்று மாதங்களுக்கு முன் கைப்பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .