2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு 10 கசையடிகள்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்திய 'குற்றத்திற்காக' பெண்ணொருவருக்கு பத்து கசையடி விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு நீண்டகாலமாக தடை உள்ளது. இத்தடையை மீறியமைக்காக நீதிமன்றமொன்றின் மூலம் தண்டனை அளிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

சைமா ஜஸ்டைனா எனும் 30-40 வயதுக்கிடைப்பட்ட பெண்ணொருவருக்கே அனுமதியின்றி வாகனம் செலுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு  நேற்று செவ்வாய்க்கிழமை இத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதை பொலிஸார் நிறுத்தி விசாரிப்பர். இனிமேல் 'அத் தவறை' செய்யமாட்டோம் என உறுதியளித்தால் அவர்களை செல்ல அனுமதிப்பது இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும் இத்தகைய தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையான பெண்கள் வீதிகளில் வாகனம் செலுத்துவது கடந்த ஜுன் மாதம் முதல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்கள் வாகனம் செலுத்துவதை தடுக்கும் ஒரே நாடாக சவூதி அரேபியா உள்ளது. பெண்களுக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்குவதாக அந்நாட்டு மன்னர் அப்துல்லா அறிவித்து இரு தினங்களில், பெண்ணொருவர் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கசையடித்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தீர்ப்பு குறித்து தொலைபேசி செவ்வியொன்றை வழங்கிய சவூதி அரேபியாவின்  மனித உரிமைகளுக்கான தேசிய சமூகத்தைச் சேர்ந்த சோஹிலா ஸெய்ன் எல் அபைதீன் முபாரக் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

'இத்தீர்ப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இவ்வாறான பிரதிபலிப்பை நாம் எதிர்பார்த்தோம்' என அவர் கூறினார்.
அதேவேளை 'போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்கு அபராதம்தான் அதிகபட்சமாக விதிக்கப்படும். கசையடி அல்ல.
நபிகளாரின் மனைவிமார்கூட ஒட்டகங்கள், குதிரைகளை செலுத்தினர். ஏனெனில் அக்காலத்தில் அவை மாத்திரமே போக்குவரத்துக்கான வழியாக இருந்தன' என அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 28 September 2011 08:54 PM

    சவுக்கடி கொடுக்காமல் சேட்டை அதிகம் என்று இயான் போதம்- பிரிட்டிஷ் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கூட கூறி இருக்கிறார். குற்றங்கள் கூடி கடைசியில் தப்பி ஓடுகையில் கொலை மரண தண்டனை ஆயுள் தண்டனை என்று போவது நிற்கும். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தப்பிக்க இடம் உள்ளது- பாதுகாப்பு பிரச்சினை வேறு- சிறையில் போராட்டம் முற்றுகை என்றெல்லாம் உணவில் விஷம் வைப்பார்கள் சாகும் வரை உண்ணாவிரதம் என்பார்கள். அது சரி ஏன் பத்து அடி, ஒன்று போதாதா சுள் என்று? பாவம்தான் பெண்கள்! இந்த லட்சணத்தில் வாக்குரிமை வேறு கொடுக்கப்போகின்றனராம்.

    Reply : 0       0

    Nalan Virumbi Wednesday, 28 September 2011 09:48 PM

    பெண் பாவம் பொல்லாதது

    Reply : 0       0

    nousath Thursday, 29 September 2011 03:43 PM

    சவூதி நாட்டுல வேற என்னென்னெமோ நடக்குது. அதெல்லாம் பார்க்கம ஒரு பெண் கார் ஒட்டினது குற்றமா. என்ன நாடு! என்ன ஆட்சி! ஒரு தப்பு தண்டா செஞ்சா பரவாயில்ல. எப்ப திருந்தப்போகுதோ அல்லாஹ்தான் அறிவான்.

    Reply : 0       0

    meenavan Thursday, 29 September 2011 05:01 PM

    2011ல் சவுதியில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு பத்து கசை அடி என்றால், 1969ல் விமான கடத்தலில் சம்பந்தப்பட்ட லைலா காலித் சவூதி பெண்ணாக இருந்தால் மரண தண்டனையை சவூதி அரசு வழங்கி இருக்குமோ?

    Reply : 0       0

    s.f Saturday, 01 October 2011 02:03 PM

    soudhi arasuku marana thandanai koduppadhu ondum kastamille. pen pennahe erukalam thane. pennuku islam katruth thandhazu olukkam than. muslimgal marumaiyei nambiyewerhal, so 10 kasa adiyum marumaikahe anufeviththal enna kurai. Akkale sahabaakkelum, nabimarhalum anufevikkaze kaste nastengala. Kuranaiyuym, hadgeesaiyum meeriye theerpa? allahwea ariwwan.

    Reply : 0       0

    xlntgson Saturday, 01 October 2011 09:37 PM

    வியாக்கியானங்கள் வேறுபடலாம். தண்டனை வழங்க போய் மக்கள் அநீதி என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. அதேநேரம் ஒரு கசையடியும் இல்லை என்று மன்னர் மன்னிக்கக்கூடாது நீங்கள் ஏன் மன்னருக்கு புத்தி சொல்லக்கூடாது? மக்கள் புரட்சி இந்த அரசர்களுக்கு இஸ்லாமிய தண்டனை முறை சட்டத்தையே மாற்றி அமைக்க வைத்து விடலாம். அவர்களுக்கு முக்கியம் குடும்பாட்சி நீதம் அல்ல நேர்மை அல்ல ஒற்றுமை அல்ல ஷீயா என்றாலே வெறுப்பு. இப்போது சிரியா பாகிஸ்தானுக்கு மிரட்டல். அடுத்தது ஈரான் என்று சௌதியிலும் கைவைக்காமலா இருக்கப் போகின்றனர், எல்லாம் அவன் செயல்.

    Reply : 0       0

    Winter Sunday, 02 October 2011 02:13 PM

    கல்பனா சாவ்லா கேள்விபட்டா கண்ணீர் விடுவாரோ??

    Reply : 0       0

    mohammed Sunday, 02 October 2011 04:29 PM

    i think they do't know the islamic rules and they are making others to misunderstand about islam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X