2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜப்பானில் சூறாவளி; 13 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து அங்கு குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோக்கியோ நகரின் தெற்குப் பகுதியில்  உள்ள இஸு ஒஷிமா தீவில் பெய்த மழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.  'விப்ஹா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளியைத் தொடர்ந்து அங்கு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 

மண்சரிவுகளில் சிக்கியும் உடைவடைந்த வீடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்து காணப்பட்டனர். மேலும், ஆறு ஒன்றுக்கு அருகில் இருவர் உயிரிழந்து காணப்பட்டதாக  அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ரோக்கியோவில் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .