2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

20 வருடங்களின் பின்னர் பர்மாவில் தேர்தல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பர்மாவில் 20 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுவரும் முதலாவது தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தல் ஜனநாயக  மக்கள் ஆட்சிக்கு வழிவகுக்குமென ஆளும் இராணுவ ஜெனரல்கள் கூறியபோதிலும், விமர்சகர்கள் இதுவொரு ஏமாற்று வேலையெனக் கூறுகின்றனர்.

ஆங் சான் சூகி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய அமைப்பு  கட்சி வாக்களிப்பதை பகிஷ்கரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளபோதிலும், இந்தத் தேர்தலில் தலையீடுகள் காணப்படுவதாக  எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான செய்திகள், தகவல்களை திரட்டுவதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய வாக்குப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் வற்புறுத்தியதாக சான் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் சாய் ஐ பயோ தெரிவித்தார். முன்கூட்டிய வாக்களிப்பு இடம்பெற்ற வேளையில்,  வாக்களிப்பு நிலையங்களுக்கு தாங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கு அனுமதிக்கவில்லையெனவும் அவர் கூறினார். மேற்படி தேர்தலானது நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றால் 80 வீதமான ஆசனங்களை பெற்று தாங்கள் வெற்றியடைவோமென அவர் உறுதியளித்தார்.


இதேவேளை, அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X