2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஷங்காய் ரயில் விபத்தில் 200பேர் படுகாயம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஷங்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 200பேர் படுகாயமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

சமிக்ஜை விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதிலேயே இப்பாரிய அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அண்மைக் காலங்களில் சீனாவின் சுரங்க ரயில் பாதைகள் விரித்தியடைந்து வந்துள்ளன. இருப்பினும் சில தொழில்நுட்ப கோளாறுகளும் இடம்பெற்று வருகின்றன. அதிவேக சுரங்க பாதைகளில் ரயில் பயணங்களை சீனா துரிதப்படுத்தியிருக்கிறது. இந்த சுரங்க ரயில் பயணத்தில் அதிகளவான சீன பயணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே தொழில்நுட்ப கோளாறினால் இந்த கோர விபத்து சுரங்க ரயில் பாதையில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லையென மெட்ரோ ரயில் திணைக்களம் அறிவித்துள்ள போதிலும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் முதல் பெட்டியில் அதிகளவான ரத்தம் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் இடம்பெற்ற சுரங்க ரயில் விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X