2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒரு கத்தரிக்காயின் கதை

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பல்லுயிர்ப் பெருக்கம், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு திங்கள்கிழமை (பிப். 15) தொடங்கி 3 நாள்கள் சென்னை தரமணியில் நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டால் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கப்படும்.
இது குறித்து அனைத்துத் தரப்பிலும் விவாதிக்கப்படும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்படும்.
கத்தரிக்காய் மட்டுமல்ல மரபணு மாற்றப்பட்ட மற்ற உணவுப் பொருள்களை அனுமதிப்பது குறித்து விவாதம் நடத்தப்படும். ஒருமித்தக் கருத்து அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உள்ளிட்ட உணவுப் பயிர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பல்லுயிர்ப் பரவல் குறித்து 2012}ல் இந்தியாவில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும். ரூ. 20 கோடியில் டேராடூனில் மரபணு காடுகள் குறித்த தேசிய அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அஜய் பரிடா, நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் விஞ்ஞானி ஏஞ்சலா கிராபர் உள்பட 23 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவில் பல்லுயிர்ப் பரவல், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த கருத்துக்கள் "சென்னை பிரகடனம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .