2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு: கோபத்தில் சீனா

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய்லாமா சந்தித்தார். தலாய்லாமாவை வரவேற்றுப் பேசிய ஒபாமா, திபெத்திய மக்களுக்காக பாடுபட்டு வரும் தலாய்லாமாவின் நோக்கங்களைப் பாராட்டினார்.
ஒபாமா, தலாய்லாமா சந்திப்பால் கோபமடைந்துள்ள சீனா  தங்கள் நாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச உறவுகளுக்கான விதிமுறைகளை அமெரிக்கா மீறிவருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மா ஜாவோக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.சீனாவின் கோபத்தைத் தணிக்கும் சிறு முயற்சியாக ஒபாமா-தலாய்லாமா சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.சுமார் 70 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறிய வெள்ளை மாளிகை, அகிம்சைக்காகப் பாடுபடும் தலாய்லாமாவை ஒபாமா பாராட்டியதாகத் தெரிவித்தது.திபெத்திய கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், திபெத்திய மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தாம் ஆதரவு அளிப்பதாக ஒபாமா, தலாய்லாமாவிடம் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .