2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டும் விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்!

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான, சுனிதா வில்லியம்ஸ் 2012ஆம் ஆண்டில் மீண்டும் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
ஏற்கனவே, 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு பயணித்த சுனிதா, 2007ஆம் ஆண்டு ஜூன் வரையில் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தியிருந்தார்.

இதன்மூலம், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த வீராங்கனை மற்றும் விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைகளைத் தட்டிச் சென்றார்.  இந்நிலையில், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் விண்வெளி மையத்துக்குச் செல்லும் சுனிதா, இந்த முறையும் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .