2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏஞ்சலினா ஜோலி நிதியுதவி

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிக்காக, ஐ.நா.வின் நல்லெண்ண தூதராகச் செயற்படும் பிரபல ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 2,000 பேர்வரை உயிரிழந்ததுடன் பல மில்லியன் மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் நிதியுதவி அளித்துவருகின்றன. இந்நிலையிலேயே ஐ.நா.வின் நல்லெண்ண தூதராகச் செயற்படும் ஏஞ்சலினாஜோலி, ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரணப் பணிக்காக வழங்கியுள்ளதுடன் தனது ரசிகர்களும் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏஞ்சலினாஜோலி ஏற்கனவே ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கியிருந்தார். அதேபோல் ஆப்கானிஸ்தானிலும் பலருக்கு உதவியிருக்கிறார். உலகின் பலபாகங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்ற ஏஞ்சலியா ஜோலி, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .