2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி  பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில், தான் எழுதிய நூலொன்றை வெளியிட்டு, அதில் கையெழுத்திட்டுக் கொடுக்கும் நிகழ்வொன்றில் டோனி பிளேயர் கலந்துகொண்டபோது அவர் மீது சப்பாத்து மற்றும் முட்டைகள் வீசப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யுத்த எதிர்ப்பாளர்கள் மற்றும் வட அயர்லாந்து சமாதான செயற்பாடுகளை எதிர்க்கும் ஐ.ஆர்.ஏ. சார்பு சின் பெய்ன் ஆதரவாளர்கள் இத்தாக்குதலை நடத்தினர்.

அதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதுடன் பின்னர் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

'ஹே டோனி, இன்று எத்தனை பிள்ளைகளை நீ கொன்றாய்?' என்பது  போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பினர்.
இம்மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகளும் பூட்டப்பட்டன.

"ஏ ஜேர்னி" எனத் தலைப்பிடப்பட்ட மேற்படி நூல் மூலம் கிடைக்கும் வருமானத்தை முன்னாள் யுத்த வீரர்களுக்கு வழங்கப்போவதாக டோனி பிளேயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .