2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சோனியா காந்தியின் சாதனை

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியாக நான்காவது  தடவையாகவும் சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டள்ளார். இப்பதவிக்கு வேறு எவரும் போட்டியிடாத நிலையில் கட்சியின் தலைவியாக சோனியா காந்தி நேற்று மீண்டும் தெரிவானார்.

இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக தடவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவானர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அவர்.

63 வயதான சோனியா காந்தி, தனது வெற்றியின் பின் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் ஒவ்வொரு பாகத்தினதும் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் காங்கிரஸ்கட்சி பிரதிபலிக்கிறது எனவும் அக்கட்சி பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவையாற்றி வருவதாகவும் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சோனியா காந்திக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.

1885 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக உமேஸ் சந்திர பனர்ஜி பதவி வகித்தார்.

சோனியா காந்தி 1998 ஆம் ஆண்டிலிருந்து இப்பதவியை வகித்து வருகிறார். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிக காலம் பதவி வகித்து வருபவர் எனும் பெருமையும் சோனியா காந்திக்கு உண்டு.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 05 September 2010 09:09 PM

    அவரை தூற்றிய மாதுகள் அரசியலில் அடையாளமே இல்லாது போய்விட்டனர். ஒரு காவி பயங்கரவாதப் பெண், அவர் பிரதரானால் தான் தீக்குளிப்பதாக மிரட்டினார். பின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இத்தாலியில் பிறந்தவர் என்பதால் போபர்ஸ் ஊழலிலும் அவரை சம்பந்தப்படுத்தி பார்த்தனர். இப்போது ஆயுத கம்பனிகள் கமிசன் வழங்குவதனாலும் தரகர் இன்றி செய்ய மறுப்பதனாலும் இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை கூட வாங்க முடியாமல் இருக்கிறது என்று கூறுகின்றனர்:. போபர்ஸ் நல்ல பீரங்கி 'காகில்' வெற்றி அதனால் தான் என்று! வாழ்த்துகள் தாயே, சோனியாஜி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X