2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மெக்ஸிகோவில் மாநகர மேயர் சுட்டுக் கொலை

Kogilavani   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெக்ஸிகோவின் மாநகர சபை கட்டிடமொன்றில் ஆயுதக் குழுவொன்று நேற்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மாநகர மேயர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள சான் லூயிஸ் பொட்டோசி மாநிலத்தின் எல் நரான்ஜோ நகர மேயரான அலெக்ஸாண்டர் லோபஸ் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.  

இவ்வருடத்தில் மெக்ஸிகோவில் கொல்லப்பட்ட ஆறாவது மேயர் இவராவார்.

மெக்ஸிகோவில் போதைப் பொருட்களை கடத்துபவர்கள், விற்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி பிலிப் கால்டேரோன் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தபின் ஏற்பட்ட வன்முறைகளால் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.   

எனினும் சான் லூயிஸ் மாநிலம் இதுவரை மிகக் குறைவான பாதிப்புகளை எதிர்கொண்ட மாநிலமாக இருந்தது.

இதேவேளை, மெக்ஸிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளின் வன்முறைகள் ,கிளர்ச்சிப் போராட்டங்கள் போன்று இருப்பதாகவும் 20 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொலம்பியாவின் நிலையில் தற்போது மெக்ஸிகோவில் உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

 

 

இக்கருத்தை மெக்ஸிகோ அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .