2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சேர்பியா, கொசோவாவை பேச்சுநடத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சேர்பியா, கொசோவோ ஆகிய இரண்டு நாடுகளையும் நேரடியான பேச்சுவார்த்தை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வுக்காண்பதற்காக  நேரடிப் பேச்சுவார்த்தையில்  சேர்பியாவும் கொசோவாவும் பங்குபற்று வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை ஏகமனதாக  தீர்மானமென்றை நிறைவேற்றியுள்ளது.  

கடந்த 2008 ஆம் ஆண்டு சேர்பியாவிலிருந்து தனியரசாக சுதந்திரம் பெற்று கொசோவோ சென்றமை குறிப்பிடத்தக்கது. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.

தனது முன்னாள் மாகாணமான கொசோவோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  சேர்பியா முன்னர் விதித்திருந்த நிபந்தனைகளையும் ஐ.நா. நிராகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்  மற்றும் அமெரிக்க அரசு என்பன ஏற்கெனவே கொசோவோ பிரிந்து சென்று சுத்ந்திரம் பெற்றமையை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X