2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துருக்கியில் அரசியலமைப்பு மாற்றம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கியில் அரசியலமைப்பை மாற்றியமைப்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு   இன்று   நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தராதரத்திற்கு ஏற்ப அரசியலமைப்பில் பல மாற்றங்களைச் செய்வதற்கு துருக்கிய அரசாங்கம் விரும்புகிறது.

இம்மாற்றங்கள் நீதிச்சேவை மற்றும் ஏனைய விடயங்களில் அரசாங்கத்திற்கு கூடிய கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்கும் என விமர்சகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

28 வருட பழமை வாய்ந்த இராணுவ அரசியலமைப்பு கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் இம்மாற்றத்தை ஆதரிப்போர் குறிப்பிடுகின்றனர்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் 26 திருத்தங்களைச் செவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .