2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இடம்பெயர்ந்தோர் முகாம்கள் சிறுவர்களுக்கு ஆபத்தான இடம்:ஐ.நா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடிய இடங்களில் ஒன்றாக இடம்பெயர்ந்தோர் முகாம்கள் இருப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் விவகாரத்திற்கு பொறுப்பான ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ராதிகா குமாரசுவாமி` தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களின் நிலைமை தொடர்பான அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கையளித்த ராதிகா குமாரசுவாமி, முகாம்களிலுள்ள சிறுவர்களுக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார்.

இந்த சிறுவர்கள் படையில் இணைக்கப்படும் ஆபத்தையும் இலகுவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகக் கூடிய ஆபத்தையும் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

சூடான், சாட், கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளிலுல்ல இத்தகைய ஆயிரக்கணக்கானோர்  தங்கியுள்ளனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தபோது முகாம்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், இந்த முகாம்கள் பாதுகாப்பானவையாக இல்லை எனவும் ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

பல முகாம்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட ராதிகா குமாரசுவாமி, சூடான் டார்பர் பகுதியிலுள்ள முகாம்களும் அவற்றுள் அடங்கும்.
   
முதல் பார்த்தவுடனையே தெரிய வருவது இந்த இடம் ஆபத்தான இடங்கள் என்பது தான். ஏனெனில், விறகு எடுக்கச் சென்றபோது அல்லது மலம் கழிக்கச் சென்றபோது பாலியல் வன்முறைக்கு உள்ளாகிய பிள்ளைகளை அங்கே காணமுடிந்ததாகவும் எனவே அவை ஆபத்தான இடங்கள் எனவும் ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டார்.

இரண்டவதாக இந்த இடங்கள் சும்மா இருப்பதற்கான இடங்களாகும் என்பதுடன், ஆயுதப் படைகளில் பிள்ளைகளை சேர்க்கக்கூடிய நிலைமைகள் அங்கே காணப்படுவதாகவும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X