2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாப்பரசர் பிரிட்டனுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார்.

பாப்பரசர் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதல்த் தடவையாகும்.

பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள பாப்பரசர், ஹொலிறூட் இல்லத்தில் பிரித்தானிய மகாராணியைச் சந்திக்கவுள்ளார்.

அங்கு செல்லும் பாப்பரசர் நகரூடாக ஊர்வலமாகச் அழைத்துச் செல்லப்பட்டு கிளாஸ்கோவில் திறந்தவெளி பூஜையொன்றை நடத்தவுள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைவரான பாப்பரசரைக் காண்பதற்காக வீதியோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாப்பரசரின் நான்கு நாள் விஜயத்தில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகளுக்காக அச்சடிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுக்கள் சில இன்னும் விற்பனையாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பக் கட்டுப்பாடு, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள், கருச்சிதைவு என்பவை பற்றிய வத்திக்கானின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

1982ஆம் ஆண்டு அப்போதைய பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பின் பாப்பரசர் ஒருவர் இன்று முதல்த் தடவையாக பிரித்தானியாவுக்கு  செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .