2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆசிரியர்களை பெயர் கூறி அழைக்குமாறு மாணவர்களுக்கு உத்தரவு

Kogilavani   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனிலுள்ளஆரம்பப்  பாடசாலையொன்று அங்குக் கற்கும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களை  சேர், மெடம் என்று  அழைக்கும் பாரம்பரியத்தை கைவிட்டு  ஆசிரியர்களின் முதல் பெயரை கூறி அழைக்கும் புது வழக்கத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கென்ட் பிராந்தியத்திலுள்ள இப்பாடசாலை நிர்வாகம், மாணவர்களுக்கு ஆசிரிய ஆசிரியர்களை அழைக்கும்போது திரு, திருமதி என்னும் அடைமொழியுடன் ஆசிரியர்களது முதல் பெயரை கூறவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்காலிகமான இத்திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லதொரு உறவு முறை பேணப்படும் என்று பாடசாலையின் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தத்திட்டத்தை ஏற்படுத்திய தலைமையாசிரியர் யூஜ் கிரின்வுட் கருத்துத் தெரிவிக்கையில், 'நாங்கள் இந்தத் திட்டத்தை ஏன் ஏற்படுத்தினோம் என்பதற்கான உட்பொருளை மாணவர்கள் விளங்கிக்கொள்வார்கள் நம்புகிறோம்.

இந்தத் திட்டமானது உள்ளார்ந்த அனுபவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் அதேவேளை ஆசிரியர்களும் மாணவர்களது நிலைக்கு இறங்கி வருவார்கள் என்று
நாங்கள் நினைக்கிறோம். இது கற்பதற்கு சாதகமானதாக அமையும் எனக்கருதுகிறோம்.

நாங்கள் இதை  முயற்சி செய்து பார்க்கின்றோம். இந்த முயற்சி நடைமுறைக்கு சாத்தியப்படாவிட்டால் மீண்டும் பழைய முறைக்கே திரும்பிவிடுவோம்' எனக் கூறியுள்ளார்.

5-11 வயதுக்குட்பட்ட சுமார் 150 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.

7 வயது மாணவனின்  தாய் சேலி பால்மர் (வயது 35) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், 'ஆசிரியர்களை அவர்களது பெயர்களை கூறி மாணவர்கள் அழைப்பது சிறியவர்களுக்கு ஆச்சரியமாக விளங்குகின்றது. உண்மையில் அந்தத் திட்டத்தை சிறியவர்கள் விரும்புகின்றார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு தாய் கூறுகையில், 'இந்தத் திட்டமானது நம்ப முடியாத அளவு ஆச்சரியமானது' என்று தெரிவித்துள்ளார்.

'மாணவர்களை சந்தோசமாக வைத்திருக்கவும் அவர்கள் பாடங்களில் மட்டும் கவனம்  செலுத்தவும் இந்தத் திட்டம் நன்கு உதவுகின்றது, எனது மகன் வீட்டிற்கு வந்து தனது ஆசிரியரை டொம் என்று பெயர் சொல்லி அழைப்பதாக தெரிவித்தான்.

சேர், டீச்சர் என்று அழைப்பதைவிட இவ்வாறு பெயர் கூறி அழைப்பதை சிறந்ததாக எண்ணுகின்றான்' எனவும் அவர் கூறியுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .