2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெனிசூலா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெனிசூலாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் தலைமையிலான கட்சி    வெற்றி பெற்றுள்ளது.

எனினும், நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.  

வெனிசூலாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் ஹியூகோ சாவேஸ் தலைமையிலான ஐக்கிய சோஷலிஷக் கட்சி  90 இற்கும் அதிகாமான ஆசனங்களை பெற்றுள்ள போதிலும், அந்தக் கட்சியால் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டில் தேர்தலை பகிஷ்கரித்திருந்த எதிர்க்கட்சி 59 ஆசனங்களையும்  மற்றுமொரு கட்சி 14 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

2012ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி சாவேஸின் செல்வாக்கை சோதிக்கும் தேர்தலாக இந்நாடாளுமன்றத் தேர்தலை ஊடகங்கள் கருதுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .