2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம் ; சுனாமி ஆபத்து இல்லை

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இன்று பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

கடலடியிலிருந்து 14.2 கிலோமீற்றர் ஆழத்தில் 7.2-75 ரிக்டர் அளவிலான இப்பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பூகம்பம்  ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் (62 மைல்) தூரத்திற்குட்பட்ட கரையோரப் பிரதேசங்களே ஆபத்தை எதிர்நோக்கக்கூடியவை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்தது.

ஆனால் சுனாமி அறிகுறிகள் தென்படாதையடுத்து சுனாமி எச்சரிக்கையை நிறுத்தியுள்ளதாக இந்தோனேஷிய பூகம்ப ஆய்வு முகவரம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

மேற்குசுமத்ரா மற்றும் பேங்குலு பிராந்தியங்களின் நகரங்களில் இப்பூகம்ப அதிர்வு உணரப்பட்டது. எனினும் இதுவரை உயிரிழப்புகள், மற்றும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள்  எதுவும் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .