2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுடில்லியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 65 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, புதுடில்லியில் ஐந்து அடுக்குமாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 65 பொதுமக்கள் பலியாகியுள்ள அதேவேளை, 80 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மேலும் 70 பேர் பலியாகியிருக்கலாமென்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானோர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு  இலட்சம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக புதுடில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

அண்மையில் பெய்த அடை மழையால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.  இதன் காரணமாக கட்டடத்தின் அடித்தளம் பலவீனமடைந்த நிலையில் அது இடிந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. (AFP)


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 17 November 2010 10:20 PM

    இந்தியாவிலும் சீனாவிலும் கட்டிடங்கள் இடிந்து விழுவது அதிகரித்து விட்டது.
    குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையில் நடக்கும் ஊழல்களும் பொறியியலாளர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக இலஞ்சம் அல்லது நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி வழங்குவதும் இதற்கு காரணம்.
    ஜப்பானின் கட்டிடக் கொள்கையை பார்த்து எல்லா வளர்முக நாடுகளும் படிப்பினை பெறவேண்டும். (வளர்முக நாடுகளை பற்றி பேசக்கூட வேண்டாம் என்கிறார் சீன ஜனபதி)
    ஜப்பான் படிப்பினை பூகம்பம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .