2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார்.

கடந்த 30 வருடகாலத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் முக்கிய சீனத் தலைவர் ஹு ஜிந்தாவோ எனக் கருதப்படுகிறது.

தாய்வான் விவகாரம், மனித உரிமைகள், நாணயக் கட்டுப்பாடு போன்றவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்றிரவு சீன ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் பிரத்தியேக விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார்.

புதன்கிழமை இவ்விருவரும் வெள்ளை மாளிகை ஓவல் மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் உத்தியோகபூர்வ விருந்துபசாரமும் நடைபெறும். பல வர்த்தக ஒப்பந்தங்களில் சீன ஜனாதிபதி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்காவின் நட்பு நாடான தாய்வான், சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X