2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிபியாவிலிருந்து தப்பிச்செல்லும் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை: ஐ.நா.

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவிலிருந்து டுனீசியாவுக்கு தப்பிச் செல்லும் மக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

எல்லை நிலைவரம் மிக மோசமாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இது ஆயிரக்கணக்கான உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் தெரிவித்துள்ளார். லிபியாவில் மோதல் வெடித்ததிலிருந்து கிட்டத்தட்ட 75,000 மக்கள் டுனீசியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்னும் 40,000 பேர் எல்லை தாண்டிச் செல்வதற்கு காத்திருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டது.

இதற்கிடையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து லிபியாவை இடைநிறுத்தி வைப்பதற்கு ஐ.நா. தீர்மானித்துள்ளது.

ஆனாலும், லிபியத் தலைவர் கேணல் முவம்மர் கடாபி தனது பதவியிலிருந்து விலகுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட மோதலை குறைத்துக் காட்டுகின்ற லிபியத் தலைவர், மேற்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பல பிரதேசங்களை கைப்பற்றுவதற்கும் முயற்சித்து வருகிறார்.

இருந்தபோதிலும் லிபியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள பல பிரதேசங்களை கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

லிபியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் அறிய வருவதாக பான்கீமூன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .