2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உளவியல் வகுப்பில் நேரடி செக்ஸ் ஷோ : அமெரிக்க பல்கலையில் சர்ச்சை

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியர் ஒருவர் நேரடி செக்ஸ் ஷோ ஒன்றை நடத்த அனுமதித்தமை  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ நகரிலுள்ள நோhர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மனித பாலியல் நடத்தைகள் குறித்து கற்பித்த உளவியல் பேராசிரியர் மைக்கல் பெய்லி, நிர்வாணப் பெண்ணொருவர் பாலியல் கருவிகளை பயன்படுத்திக் காட்டுவதற்கு அனுமதியளித்தார்.
சுமார் 100 மாணவர்கள் விரிவுரையின் பின்னர் இந்நிகழ்ச்சியை பார்வையிட்டுள்ளனர்.

இந்நிகழ்வை பார்வையிட்ட மாணவர்களுக்கு முன்கூட்டியே இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் தலைவர்  பேராசிரியர் மோர்ட்டன் ஸ்கார்பிரியோ உறுதியளித்துள்ளார்.

'இப்பல்கலைக்கழத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை கற்பிப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்த செயல்விளக்கமானது எமது பல்கலைக்கழக அங்கத்தவரினால் மேற்கொள்ளப்பட்ட மோசமான தீர்மானமாகும். நோர்த்வெஸ்டன் பல்கலைக்ககழத்தின் கல்வி நோக்கங்களைக் கருத்தற்கொள்ளும்போது இது அநாவசியமானது என நான் நம்பவில்லை' அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உளவியல் பேராசிரியர் மைக்கல் பெய்லி மேற்படி நேரடி செக்ஸ் ஷோ நிகழ்ச்சி தவறல்ல எனக் கூறிவருகிறார். இது குறித்த சர்ச்சை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமான வகுப்பு நேரத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் அவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே அந்நிகழ்வை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • suresh Saturday, 05 March 2011 01:37 AM

    இதுபோல் வகுப்புக்கள் அங்குமட்டும்தான் நடக்குமா?

    Reply : 0       0

    hilmee Sunday, 06 March 2011 07:45 AM

    nalle visayam nadakkum podhu pala pirachchinai varaththaan seyyum. ninkal thoderndhu nadaththunkal sir..........................aanaal.......

    Reply : 0       0

    xlntgson Sunday, 06 March 2011 07:50 PM

    suresh, இலங்கையிலும் ஏற்பாடு செய்ய உங்களுக்கு விருப்பமா? அதைத்தான் எப்போதும் படித்துக் கொள்ளலாமே! பாடங்களை!

    Reply : 0       0

    xlntgson Tuesday, 08 March 2011 08:47 PM

    பள்ளிப்பாடங்களை!

    Reply : 0       0

    G.Ramakrishnan Wednesday, 20 July 2011 07:46 PM

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .