2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் ராஜதந்திரம்: பாகிஸ்தான் பிரதமர் இந்தியா செல்கிறார்

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு இந்திய பிரதமர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி, ஏற்றுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை மொஹாலியில் நடைபெறவுள்ள இப்போட்டியை பார்வையிட வருமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி ஸர்தாரிக்கும் பிரதமர் யூஸுப் ரஸாகிலானிக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரியும் பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினர். சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் கிலானி இந்தியாவுக்குச் சென்று போட்டியை பார்வையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஜனாதிபதியின் பேச்சாளர் பர்ஹதுல்லா பாபர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் இந்திய விஜயத்தின்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியின் முடிந்தவுடன் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை பிரதமர் கிலானி இந்தியாவுக்கு இருநாள் கிரிக்கெட் ராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவ்விஜயம் குறித்து இந்திய பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .