2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேணல் கடாபி பிறந்த ஊரில் கூட்டுப்படைகள் தாக்குதல்

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியா மீது தாக்குதல் மேற்கொண்டுவரும் கூட்டுப்படைகள் லிபிய தலைவர் கேணல் கடாபி பிறந்த நகரான சைர்தில் விமான குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளன.

விமானங்கள் வானில் பறக்கும் நிலையில் நகரில் பல வெடிச்சத்தங்களை கேட்டதாக சைர்த் நகரிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல்களால் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக லிபிய அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

லிபியா மீதான நடவடிக்கைகக்கான தலைமைப் பொறுப்பை நேட்டோ அமைப்பு ஏற்றுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

லிபியாவில் பல நகரங்களை மீண்டும் கைப்பற்றி வரும் கிளர்ச்சியாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக சைர்த் நகர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நகரை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை கேணல் கடாபிக்கு ஆதரவான படைகள்  இன்று மேற்கொண்ட பாரிய தாக்குதல்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .