2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேணல் கடாபி கைது : லிபிய தேசிய இடைக்கால கவுன்ஸில் அறிவிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியாவை தற்போது நிர்வாகம் செய்யும் தேசிய இடைக்கால கவுன்ஸில்தெரிவித்துள்ளது.

கேணல் கடாபி 'பிடிக்கப்பட்டுள்ளதாகவும்' ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்பது உறுதியில்லை எனவும் லிபிய  தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகளின் களத் தளபதி ஒருவர் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிடிபட்டுள்ளதாகவும் அவரின் இரு கால்களும் காயமடைந்துள்ளதாகவும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கேணல் கடாபியின் சொந்த நகரான சேர்ட்டேவை கடும் மோதல்களின் பின்னர் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடாபி சேர்ட்டே நகரில் வைத்து இடைக்கால கவுன்ஸில் படைகளிடம் பிடிபட்டுள்தாகவும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0

  • mtmsiyath Thursday, 20 October 2011 10:54 PM

    இனிமேலாவது மக்கள் நிம்மதியுடன் வாழட்டும்.

    Reply : 0       0

    mohammed Hiraz Thursday, 20 October 2011 11:31 PM

    சியாத் நிம்மதியா? லிபியாவிலா? இனிமேல்தான் அங்கே உண்மையான யுத்தம் ஆரம்பமாக போகிறது, மத சார்பற்ற மேற்கை ஆதரிப்போருக்கும், மத பற்றுள்ள தேசியவாதத்தை ஆதரிப்போருக்குமான போராட்டம் வெடிக்க போகிறது. அதனால் பல மில்லியன் மக்கள் கொல்லபடும் நிர்க்கதியாகப்படும் நிலையுமே ஏற்படுவதை எதிர்வு கூற முடியும். ஈராக் ஆக்கிரமிப்புக்கு பின்னர் மூன்று மில்லியன் மக்கள் கொல்லபட்டிருக்கின்றனர். இதே நிலைமைதான் லியியாவிலும் ஏற்படும் மேலும் அடுத்த இழக்கு ஜோர்தானா? சிரியாவா, ஈரானா என்பதே ஆக்கிரமிப்பளர்களின் சிந்தனையை குடையும் கேள்வியாகும். ஆனால் அடுத்த பத்தாண்டுக்குள் இந்த மூன்று நாடுகளுக்குமே இதே நிலமைதான் ஏற்படும் பொருட்கள் பிரயோசனம் தராமல் பழுதடைந்தால், அழுகிவிட்டால் எரிவது குப்பை தொட்டியில்தானே?

    Reply : 0       0

    Razik Thursday, 20 October 2011 11:58 PM

    குட் நியூஸ் ..... :-)

    Reply : 0       0

    meenavan Friday, 21 October 2011 01:07 AM

    இரத்தம் சிந்தா புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி 42 வருட ஆட்சியின் முடிவாக கடாபி தனது இரத்தத்துடன் பல நூறு உயிர்களினால் தமது நாட்டை ரணகளமாக்கி உள்ளார். வல்லரசு வல்லூறுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடாபி,வல்லூறுகளின் சதியும்,அவரது அதிபிரசங்கிதனமும் உயிருக்கு உலையானது. இனி என்ன வல்லரசு வல்லூறுகள் பெற்றோலிய கொள்ளையை தாம் விரும்பியவாறு மேற்கொள்ளும்.

    Reply : 0       0

    amakfareed Friday, 21 October 2011 02:57 AM

    அநியாயமாக ஒரு உயிரை பறித்து விட்டீர்களே.

    Reply : 0       0

    manithan Friday, 21 October 2011 04:45 AM

    தம்பி ராசிக்கு எதுப்பா உனக்கு குட் நிவ்சு.. நீங்களும் இஸ்லாமிய பேர வச்சிக்கிட்டு துள்ளக்கூடாது மணி .

    Reply : 0       0

    Citizen Friday, 21 October 2011 08:00 AM

    மனிதன்.... நீங்கள் கூறுவது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? முஸ்லிம் என்றால் கொலை செய்தாலும் பரவாயில்லையா? நீங்கள் முஸ்லிம் என்பதற்காக தவறு செய்த எந்த முஸ்லிமும் தண்டிக்கப்பட கூடாது என்று நினைப்பது தவறு. தப்பு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். அதுக்காக கொலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உயிரை பறிப்பது அதை கொடுத்த இறைவனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது..

    Reply : 0       0

    manithan Friday, 21 October 2011 08:04 PM

    தம்பி சிடிசன் முஸ்லிம் என்பதற்காக வக்காலத்து என்பது பிழையான கான்செப்ட். முதலாவது கொல்லப்பட்டது கொலைகாரனனாலும் சந்தோசப்படுவது மனிதமல்ல. இரண்டாவது வடிகட்டப்பட்டு மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான செய்திகளைக் கொண்டே நாங்கள் தீர்மானமெடுப்பது புத்திசாலித்தனமல்ல. குண்டுச்சட்டிக்க குதுர இன்னமும் நல்லதல்ல. இலங்கைல ஈழப் போராட்டம் தமிழ் மக்களுக்கு சுதந்திரப் போராட்டமாகவும்இ சிங்கள மக்களுக்கு நாட்டைக் குழப்புவதாகவும்இ முஸ்லிம்களுக்கு பாசிசமாகவும் தெரியலையா விஷயம் தெரியாட்டிலும் கேட்பது அறிவாளிகளின் பண்பு .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X