2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனது 86ஆவது வயதில் இன்று மும்பையில் காலமானார். இவரது மரணத்தை அடுத்து மராட்டிய மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதாகவும் அதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பால்தாக்கரே கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அரவது மரணத்தை அடுத்து மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் பொலிஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது. மும்பை நகரம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. தாக்கரேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை பிற்பகல் வரை சிவாஜி பூங்காவில் வைக்கப்படும். பின்னர் மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

You May Also Like

  Comments - 0

  • irakkakandy Saturday, 17 November 2012 05:47 PM

    இந்தியாவை பீடித்திருந்த மிக பயங்கரமான வைரஸ் ஒன்று இன்றோடு நீங்கி விட்டது.

    Reply : 0       0

    rima Saturday, 17 November 2012 07:26 PM

    மதத்துவசவாதிகள். இவர்கள் இருந்துதான் என்ன? இறந்துதான் என்ன?

    Reply : 0       0

    xlntgson Sunday, 18 November 2012 04:45 PM

    KODHIPPAAR, KODHIPPADAIYA SEIVAAR! IRAPPILAAVADHU IVAR AMAIDHI ADAIVAARAA? MADHAVERI, INAVERI, MOZHIVERI ENRU PAARAAMAL NERUPPAIK KAKKIK KONDE IRUNDHAVAR. UDDHAM AND RAJ, IRUVARUM INAIYA VAAIPPILLAI. S.K.SHINDE NIMMADHI ADAIVAAR.

    Reply : 0       0

    amr Monday, 19 November 2012 04:44 AM

    இது போன்ற சனியன்கள் உலகில் இருந்து அழிந்தால்தான் உலகம் உருப்படும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .