2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்து

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் 9 நாட்களுக்கு பின்னர் யுத்தநிறுத்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேல் நேரப்படி நேற்றிரவு 9.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, காஸாவிலிருந்து சில ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தவில்லையெனவும் இஸ்ரேலிய வானொலியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த யுத்தநிறுத்தத்தையொட்டி இரவு வேளையில் வீதிகளில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான காஸா மக்கள், வானவேடிக்கைகளை மேற்கொண்டும் கொடிகளை அசைத்தும் கொண்டாடினர்.

இஸ்ரேல் மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்ஸுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்ஸில் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த மோதல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பிராந்தியத் தலைவர்களுடனான சந்திப்பொன்றில் ஈடுபட்டதுடன், இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார். காஸாவில் உடனடியாக மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .