2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யேமன் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் குண்டு வெடிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


யேமனின் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் 20 பேர் மரணடைந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வளாகத்தில் துப்பாக்கிச் சண்டை  இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சில் பணிகள் ஆரம்பமான சிறிது நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்கொலைதாரி அமைச்சு நுழைவாயிலினுள் காரை செலுத்தி வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முழு இடமும் அதிர்ந்தது. கட்டிடத்திலிருந்து புகை மூட்டம் கிளம்பியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வந்த இரண்டாவது காரில் இருந்தவர்கள் கட்டிடங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவ உடையிலிருந்த துப்பாக்கிதாரிகளுடன் இராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க இராணுவத்திற்குள் நிலவிய சட்ட மீறல்கள் மற்றும் பிளவுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படும் அதேவேளை, அல்கைதா போராளிகளுடனும் பிராந்திய போராளிகளுடனும் யெமன் பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .