2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஓருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அமெரிக்க பிரஜைகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் மூவரே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி இறந்துவிட்டாரா அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

குறித்த மருத்துவமனையின் நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் மீது குறித்த பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது கொல்லப்பட்ட மூவரில் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும் ஏனையவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநுல்லா என்னும் பெயர் கொண்ட பொலிஸ் அதிகாரி இந்த தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தன்னைத்த தானே சுட்டு கொண்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன எனினும் குறித்த நபர் காயமடைந்த நிலையில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X