2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெற்றிகரமான விண்ணில் பாய்ந்த அக்னி-5

George   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணு ஆயுதங்களுடன் 5000 கிலோமீற்றர்வரை  விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை, இன்று சனிக்கிழமை(31)மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 


ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.


இதன் மூலம் சாலையிலும் இருந்தும் கூட இந்த ரக ஏவுகணை மூலம் எதிரிகளின் இலக்கை தாக்கமுடியும். மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவினாஷ் சந்தரின் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்டது இந்த அக்னி ரக ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசெம்பர் மாதமே இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பிற்போடப்பட்டது.


இன்று நடைபெற்ற சோதனை முயற்சியில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஐதராபாத்தில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கூடங்களில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 


இந்த ஏவுகணை மூலம் ஆசியாவில் உள்ள எந்த ஒரு நாட்டையும், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவின் ஒரு சில பகுதிகளையும் தாக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .