2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின; 200 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப் படகுகள் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து 200 இற்கும் அதிகமான  குடியேற்றவரவாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

'இந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் ஒன்பது பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஏனைய 203 பேரை கடல் அலை இழுத்துச்சென்றுள்ளது' என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின்; இத்தாலியிலுள்ள பேச்சாளர் ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பயங்கரமானதும் சோகமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை அன்று நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகு மூழ்கியதால், குறைந்தபட்சம் 29 குடியேற்றவரவாளர்கள்; உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இத்தாலியிலுள்ள  லம்பெடுசா தீவுக்கு அருகில் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு படகுகள் லிபியாவின் கரையோரத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்டிருந்ததாகவும் ஒவ்வொரு படகிலும் 100 இற்கும் அதிகமானவர்கள் இருந்ததாகவும் குடிவரவாளருக்கான சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X