2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ‌எஸ் அமைப்பு ஈராக்கில் சந்தேகத்துக்குரிய இரசாயன தாக்குதல்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு ஈராக்கில் உள்ள குர்டிஷ் போராளிகளுக்கு எதிராக ஐஎஸ் அமைப்பின் தாக்குதலாளிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தமாத ஆரம்பத்தில் இர்பில் நகரத்துக்கு அருகில் நடந்த தாக்குதலில் குர்டிஷ் படைகள் சுவாசிக்க கஷ்ற்றபட்டதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எவ்வகையான இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்காத போதும், அமெரிக்க அதிகாரிகள் C4H8Cl2S எனப்படும் கடுகு வாயுவை பயன்படுத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முன்னர் ஐ‌எஸ் அமைப்பு குளோரின் வாயுவை குர்டிஷ் போராளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .