2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2300ஆம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது-ஆய்வு முடிவுகள் தகவல்

Super User   / 2010 மே 12 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியில் அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக எதிர்வரும் 300 ஆண்டுகளில் மனிதன் உட்பட எந்தவொரு உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் "நிவ் சவுத் வேல்ஸ்" பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர்.

தங்கள் ஆய்வு முடிவுகளை தேசிய விஞ்ஞான நிறுவகம் மற்றும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக நிறுவகம் ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இதே விகிதத்தில் நிலக்கரி, பெட்றோலியம் ஆகியவற்றை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து, 2300ஆம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை குறைந்தபட்சம் 7 டிகிரி சென்டிகிரேட் (13 பரனைட்) அளவுக்கு அதிகரித்துவிடும்.

இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாகி உயிர்கள் வாழவே முடியாத நிலை உருவாகும். 11 முதல் 12 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்தால், உலகம் முழுவதுமே மனிதன் உட்பட எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது.

இவ்வாரானதொரு ஒரு சூழல் ஏற்படுவதற்கு 50 வீதமளவில் வாய்ப்புள்ளது என்று குறித்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .