2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3ஆம் உலகமகா யுத்தம் தண்ணீரினால் உருவாகலாம் - அப்துல் கலாம்

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

'சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும் - இன்றும்' என்ற தலைப்பில் கோவையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு பற்றிய கண்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அப்துல் கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்…

கடந்த 15 வருடங்களின் முன்னர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் விற்பனைக்கு வருமென நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இன்று வெளிநாட்டு முதலீட்டு கம்பனிகள் எல்லாம் இந்தியாவில் 'மினரல் வோட்டர்' கம்பனிகளை ஆரம்பித்திருக்கிறது. இது நாளடைவில் இந்திய குடிநீருக்கே ஆபத்தாக முடியும். நம்மைச் சுற்றியிருக்கிற நாடுகளிலும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அந்த நாடுகள் ஆயுதபலமுள்ள நாடுகள். ஆகையினால் எதிர்காலத்தில் இந்தியாமீது தண்ணீர் கேட்டு போர்தொடுக்காமல் இருக்கப்போவதில்லை. இவற்றையெல்லாம் நிவர்த்திசெய்ய வேண்டுமானால் நதிகளின் இணைப்பு அவசியம்.

அரசியல் லாபத்திற்காக நதிநீர் இணைப்பில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. ஆட்சிகள் மாறுகின்ற பொழுது நதிநீர் இணைப்பு திட்டங்களும் மாறிவிடுகின்றன. எனக்கொரு கனவிருக்கிறது. இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள நதிகளை இணைக்கவேண்டும். அதன் மூலம் பல மில்லியன் மக்கள் பயனடைய வேண்டும் என்பதாகும். இக்கனவு நினைவாகவேண்டுமானால் இளைஞர்களால்தான் முடியும். தண்ணீர் பாதுகாப்பு படையணியினை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். நல்ல இளைஞர்களால்தான் நாளைய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் அப்துல் கலாம் தொடர்ந்து உரையாற்றினார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 19 July 2010 10:00 PM

    பிடேல் காஸ்ட்ரோ கூறி இருக்கிறார், இராக் மீது அணுவாயுத குற்றச்சாட்டு பொய்யாக கூறி போர் தொடுத்ததைப் போல் ஈரான் மீதும் தொடுக்கப்படும் என்று. அரபுகள் சதாம் ஹுசைனை கைவிட்டதே போல் ஈரானையும் கைவிட்டு விடுவார்கள் என்றாலும் கொரியா அந்நேரம் பார்த்து அமெரிக்காவின் மீது தாக்குதல் தொடுக்கும், சீனா ஆதரவோடு இந்தியாவையும் தாக்க உலக யுத்தம் வெடிக்கும் என்று! நீருக்காக யுத்தம் என்றால் கூட இமயம் உருகி கடல் மட்டம் கூடி தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது, பிரளயம் வறட்சியால் பஞ்சம் மாறி மாறி வரும் விஞ்ஞான போர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X