2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரிய ஆர்ப்பாட்டங்களில் 3000 பேர் பலி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது ஏழு மாதங்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3000ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் 187 சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர்; நவநீதம்பிள்ளை, கடந்த 10 நாட்களில் 100 பொதுமக்கள் மரணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான சிரிய நாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

சிரியாவின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுக்குமென நவநீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இந்த யுத்தத்திற்கு பயங்கரவாதிகளே காரணமெனவும் இவர்களால் 1,100 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டதாகவும் சிரியா நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 


You May Also Like

  Comments - 0

  • manithan Tuesday, 18 October 2011 03:41 PM

    பசார் அல்-அசாத்தின் ஈவிரக்கமற்ற செயற்பாட்டினால் மக்கள் அவதியுறுகின்றனர். ஒழியட்டும் அவரின் ஆட்சி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X