2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிபியா தொடர்பான லண்டன் மாநாடு: 35 நாடுகள் பங்கேற்கும்

Super User   / 2011 மார்ச் 27 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராhன கூட்டுப்படைகளின் தாக்குதல் தொடர்பாக லண்டனில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாநாட்டில் பங்குபற்றுவதாக 35 நாடுகள் உறுதியளித்துள்ளன.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், கட்டார் பிரதமர், ஹமட் பின் ஜேசெம் ஆகியோரும் இதில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இம்மாநாட்டில் பங்குபற்றுமாறு நேட்டா, அரபு லீக், ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை சேர்ந்த நாடுகளுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

லிபியா மீதான நடவடிக்கைகளின் இலக்கு, கூட்டுப்படைகளின் கட்டளைக் கட்டமைப்பு என்பவற்றின் நிச்சயமில்லாத தன்மை என்பவற்றின் பின்னணியில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

லிபியான மீது தாக்குதல் நடத்தும் கூட்டுப்படைகளின் தலைமைப் பொறுப்பை அமெரிக்காவிடமிருந்து நேட்டோ பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .