2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈராக் தேவாலயத்தில் பணயக் கைதிகளை மீட்கப் போராட்டம் ; 45 பேர் பலி

Super User   / 2010 நவம்பர் 01 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அந்நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது  45 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிறுமாலை ஆயுதபாணிகள். பாக்தாத்தாத்தின் பங்குபரிவர்தனை நிலையத்தை தாக்கிவிட்டு பின்னர் அருகிலிருந்து மாதா கோவிலொன்றுக்குள் புகுந்தனர். குண்டுகள் பொருத்தப்பட்ட தற்கொலை  அங்கிகள்,  கிரனேற்றுகளுடன் தேவாலயத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு மாலைநேர வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த சுமார் 100 பேரை பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்தனர்.

பல மணித்தியாலங்களின் பின்னர் பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக ஈராக் இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.  இதன் போது குறைந்தபட்சம் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்நடவடிக்கை முடிவடைந்ததது. தேவாலயத்திற்குள் தீவிரவாதிகள் தம்மைத்தாமே வெடிக்க வைத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒரு பாதிரியார், 9 பொலிஸார், 5 தீவிரவாதிகள் ஆகியோரும் அடங்குகின்றனர். காயமடைந்தவர்களில் பலர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறையிலடைக்கப்பட்டுள்ள அல் குவைதா இயக்க அங்கத்தவர்களை விடுதலை செய்யுமாறு தீவிரவாதிகள் கோரியதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X