2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

COVID-19: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 சதவீதத்தால் அதிகரித்தது

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 57 சதவீதத்தால் அதிகரித்து 366ஆக நேற்று  உயர்ந்துள்ளதுடன், COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 25 சதவீதத்தால் அதிகரித்து அங்கு 7,375 பேர் தற்போது COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளானோரால் தீவிர சிகிச்சை வசதிகளின் அதிகரித்து வரும் நெருக்கடியை எதிர்நோக்குகையில் லொம்பார்டியிலுள்ள சுகாதார அமைப்பானது தகருவதற்கான படிநிலையில் காணப்படுவதாக கொரிரே டெல்ல செரா பத்திரிகைக்கு லொம்பார்டி பிராந்திய நெருக்கடிப் பதிலளிப்பு பிரிவின் தலைவர் அன்டோனியோ பெஸென்டி தெரிவித்துள்ளளார்.

இதேவேளை, COVID-19-ஆனது எமது அயல் நாடுகளான மாலைதீவுகள், பங்களாதேஷ் உள்ளடங்கலாக 100 நாடுகள், பிராந்தியங்களுக்கு பரவியுள்ள நிலையில் 110,000க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் 3,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நேற்றைய முடிவில் 40 பேரே புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், தகவல்களை ஆணைக்குழு இவ்வாண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெளியிட ஆரம்பித்த பின்னர் பதிவுசெய்யபட்ட குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அந்தவகையில் தற்போது சீனாவில் 80,735 பேர் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய முடிவில் சீனாவில் 22 பேர் COVID-19-ஆல் இறந்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3,119ஆக காணப்படுகிறது.

இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 194ஆக நேற்று  அதிகரித்துள்ளதுடன், அங்கு 6,566 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 7,478ஆக இன்று உயர்ந்துள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கொரிய நிலையங்கள் தெரிவித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 51ஆக உயர்ந்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .