2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அகதிகளை திருப்பியனுப்புவதை முடிவுக்கு கொண்டு வரவுள்ள ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க எல்லையை வந்தடையும் குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹொண்டூரஸிலிருந்து வந்த அகதிகளை திருப்பி அனுப்பும் ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழான குறித்த நாடுகளுடனான ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர ஐ. அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹொண்டூரஸுடனான ஒப்பந்தங்களை, ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது இடைநிறுத்துவதாக அறிக்கையொன்றில் ஐ. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கின் நேற்று தெரிவித்துள்ளார்.

ஐ. அமெரிக்கா, குவாத்தமாலாவுக்கிடையேயான ஒப்பந்தத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கொவிட்-19 பரவல் காரணமாக இது கடந்தாண்டு மார்ச் மாதம் நடுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எல் சல்வடோர், ஹொண்டூரஸுடனான ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .