2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அணுவாயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீடித்த ஐ. அமெரிக்கா, ரஷ்யா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது அணுவாயுதங்களின் கொள்ளளவுகளை மட்டுப்படுத்தும் ஒப்பந்தமொன்றை 2026ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான இணக்கமொன்றை இறுதி செய்துள்ளன.

புதிய மூலோபாய ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தமானது இன்று காலாவதியாகவிருந்தது. இதன் மூலம் ரஷ்ய, ஐ. அமெரிக்காவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், குண்டுவீச்சு விமாமங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், இதில் புதிய வகை ஆயுதங்கள் குறிப்பிடப்படவில்லை.

முதலில் 2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த குறித்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு நாடுகளும் 1,550க்கும் அதிகமான மூலோபாய ஆயுதங்களை தரையிறக்க முடியாமலிருந்ததுடன், அவர்கள் வழங்கும் தரை, நீர்மூழ்கி அடிப்படையிலான ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்களையும் மட்டுப்படுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .