2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அணு ஒப்பந்தத்தை ஈரான் மீறியமைக்கு கண்டனம்

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரான்ஸ்

அணு ஒப்பந்தத்தை ஈரான் மீறியமைதண்டிக்கும் செயற்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் ஆரம்பித்தன

அணு ஒப்பந்தத்தை ஈரான் மீறியமைக்காக அதனைத் தண்டிக்கும் செயற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், மேற்குறித்த முடிவை விமர்சித்துள்ள ரஷ்யா, புதிய பதற்றத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமையும் என எச்சரித்துள்ளது.

இந்த அணு ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா விலகியமைத் தொடர்ந்து ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அணு ஒப்பந்தத்தில்

தொடர்ந்தும் கவனஞ் செலுத்துவதாகப் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனிக்கு முழுமையாக ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப்

பேச்சாளரொருவர், மேலதிக இராஜதந்திர, பொருளாதாரத் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்துக்குப் பதிலாக முழுமையான புதியதொரு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேரம்

பேசப்படும் ஒப்பந்தத்தை தான் விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்தாண்டு மே மாதத்திலிருந்து தாம் உறுதியளித்த விடயங்களிலிருந்து ஈரான்

பின்வாங்குவதாக பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியாவின் வெளிநாட்டமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், அணு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தரப்பொன்று, மற்றைய

தரப்பு ஒப்பந்தத்தின்படி ஒழுகவில்லை என இணைந்த ஆணைக்குழுவொன்றின் முன்னால் குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்.

இந்நிலையில், ஆணைக்குழுவால் பிரச்சினை தீர்க்கப்பட முடியாவிட்டால் அது

ஆலோசனைச் சபையொன்றுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்குச் செல்லும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையானது மீண்டும் தடைகளை விதிக்கும்.

அந்தவகையில், இந்த நடைமுறையின் முதலாவது சந்திப்பானது, ஒஸ்திரியாவில் இம்மாத இறுதியில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா, ரஷ்யாவை உள்ளடக்கியதாக நடக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .