2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமைதிக்குக் கோருகிறார் குட்டரெஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், சிரியாவில் அமைதி நிலையை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். சிரியாவில், இஸ்‌ரேலால் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் நிலையிலேயே, இந்த அவசரக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

சிரியாவில் அதிகரித்துவரும் மோதல் நிலைமையையும், எல்லை தாண்டி ஏற்படும் பதற்றமான நிலைமையையும், செயலாளர் நாயகம் அவதானித்து வருகிறார் என்று குறிப்பிட்ட ஐ.நா பேச்சாளர் ஸ்டீவனி துஜாரிக், வன்முறைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட வேண்டுமெனக் கோருகிறார் என்றும் தெரிவித்தார்.

சிரியாவின் உள்நாட்டுப் போர், 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த பின்னர், ஈரானும் இஸ்‌ரேலும் நேரடியாக மோதும், பாரதூரமான சம்பவமாக இது அமைந்துள்ள நிலையில், “ஏழு ஆண்டுகள் நீளும் இந்தப் போரின் மிக மோசமான வன்முறைக் காலமாக, இது அமைந்துள்ளது” என, ஐ.நா செயலாளர் நாயகம் விவரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .