2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசியலுக்கு வருகிறார் கமல்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசன் விரைவில் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அது தொடர்பிலான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வௌியாகும் எனவும் பரபரப்பான தகவல்கள் வௌியாகியுள்ளன.

கமல்ஹாசனுக்கு நெருக்கமான ஒருவர் இந்தத் தகவலை வௌியிட்டதாக “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

தமிழக அரசியல் மற்றும் இந்தியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து அண்மைக்காலமாக கமல்ஹாசன் சர்ச்சைக்குாிய பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதற்கான முனைப்புடன் செயற்படுவதாக பல்வேறு தரப்பினர் கருத்து வௌியிட்டு வந்ததுடன் அதற்கு மாற்றுக்கருத்துகளும் பரவியிருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலேயே கமல்ஹாசன் அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசன், கடந்த முதலாம் திகதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்திருந்தார்.

தமிழகத்தின் தற்போதைய சூழலில் அரசியல் வெற்றிடம் காணப்படுவதாக கமல்ஹாசன் எண்ணுவதாக அவருக்கு நெருக்கமான மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X